கருணை இல்லம்

முன் பின் நாம் அவரை பார்த்ததில்லை ஆனால் தங்க இடம் கொடுத்தார். நமக்கு மட்டும் இன்றி நம் மனைவி மக்களுக்கும் ஏன் நம் குடும்பத்துக்கே தங்க இடம் கொடுத்தார் அவர் தான் கடவுள்.
அப்படி நாம் தங்கிய இடத்தில் நம்மை இந்த உலகிற்கு அறிமுகம் செய்த தாய் தந்தையருக்கு தங்குவதற்கு மனிதன் இடம் கொடுப்பதில்லை.
நாங்கள் சந்தித்த பல மனிதர்கள் குடும்பத்தால் கைவிடப்பட்டவர்கள் . அவர்களின் சரித்திர கதைகளை கேட்க்கும் பொழுது அவர் வசதியாக பல சொந்தங்களுடன் வாழ்ந்தவராஹா இருப்பர். காலத்தின் அவசர கோலத்தில் சிக்கி தவிக்கும் மனிதர்கள் அவர்களை கைவிட்டாலும் இந்த பசி இல்லா தமிழகம் அவர்களை கைவிடுவதில்லை .
அவர்களுக்காக நாங்கள் பல பகுதிகளுக்கு சென்று கருணை இல்லங்களை அணுகி வூவொருவருக்கும் பிடித்த மற்றும் அவர்களுக்காய் விருப்பத்திற்கு இணங்க இருக்கும் இல்லங்களில் சேர்த்து அவர்களுக்கான வாழ்வாதாரத்தயும் ஏற்படுத்தி வருகிறோம் .
அவ்வாறு இல்லங்களை அணுகி அவர்களை சேர்க்கும் பொழுது நமது அமைப்பு பல இன்னல்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே நமது பசி இல்லா தமிழகம் நமக்கான ஒரு கருணை இல்லத்தை உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம் .

Translate »