பசி இல்லா தமிழகம்

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்

இன்று பசியே இல்லை என்று சுற்றி திரியும் மானிட கூட்டத்தின் நடுவே ஒரு வேலை உணவு கிடைக்காமல் இருக்கும் மானிட கூட்டம் நாம் கண்களுக்கு புலப்பட வில்லை.
தற்போதைய காலத்தில் ஒரு வேலை உணவுக்கு கூட பணமில்லாத அளவுக்கு யாரும் உழைப்பதில்லை. அப்பொழுது யார்தான் பசியுடன் இருக்கின்றனர் என்று கேள்விகள் நமக்குள் எழலாம். ஆம் இருக்கின்றனர், அவர்கள் தான் மன நலம் பாதித்து குடும்பங்களால் கைவிடப்பட்டு கைவிட்ட தன்னை மறந்த மனிதர்கள்.
இவர்களை பற்றி நாம் ஒரு பொழுதும் சிந்ததில்லை ஏன் அவர்கள் குடும்பங்களே சிந்திப்பதில்லை. இவர்களை நோக்கித்தான் எங்கள் பயணம் தொடர்ந்து பயணித்து கொண்டிருக்கிறது.
குறிப்பாக ஆரம்பத்தில் மக்களிடம் மிஞ்சிய உணவை சேகரித்து அதை பார்சல் செய்து மன நலம் பாதித்து பசி அறியாமல் சுற்றி திரிபவரை தேடி உணவு அளித்து வந்தோம். இந்த அமைப்பு பெரிய பொருளாதாரத்தை வைத்து கொண்டு இயந்க்கும் அமைப்பு கிடையாது.
அன்றாடம் மக்களிடம் கிடைக்கும் தர்மம் சார்ந்த உணவை பெற்று அதை உரியவரிடம் மற்றும் யாசிப்பவரிடமும் கொண்டு பொய் சேர்பதையே எங்கள் பணியாக கொண்டிருக்கிறோம்.
ஆனால் தற்போது அது நிவர்த்தி அடையவில்லை. ஏனெனில் தினமும் எங்களை எதிர்பார்த்து உழைக்க தகுதி இல்லாத யாசிப்பவர்கள் மற்றும் சில மன நலம் பாதித்து எங்களுடைய அன்பான அரவணைப்பில் மன நலம் சீரடைந்து வரும் அணைத்து நபர்களும் எங்களிடம் தினம் உணவை எதிர்பார்க்கும் பொழுது பாரதியின் கவிதா எங்கள் கண் முன் வந்து செல்லிறது.
“தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்”

Translate »