#இல்லம்_சேர்க்க_உதவுவோம்:#கோவை_நண்பர்கள்_கவனத்திற்குசென்னை #வடபழனி பகுதியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் தெரிகின்ற நபர் சுற்றித் திரிந்து கொண்டிருந்தார்.நமது #பசியில்லா_தமிழகம்_அறக்கட்டளை நண்பர்கள் #ஜாபர்_அலி, #கார்த்திக்_ராஜா மற்றும் #பிரசாந்த் ஆகியோர் அவரை மீட்டெடுத்து முதற்கட்டமாக அவரை சுத்தப்படுத்தி புத்தாடைகள் அணிவித்தனர். விசாரித்து பார்க்கும்பொழுது அவர் #கோவை பகுதியைச் சார்ந்தவர் என்றும் அவரது பெயர் #நசீர்_உசைன் என்றும் கூறுகிறார். கோவை பகுதியில் உள்ள நண்பர்கள் இந்த நபர்களை பற்றிய தகவல் அறிந்தால் உடனடியாக #பசியில்லா_தமிழகம்_அறக்கட்டளையை தொடர்பு கொள்ளவும். கொரோனா காரணத்தினால் எந்த காப்பகத்திலும் சேர்க்க முடியவில்லை.இன்னும் இது போன்று இலட்சக்கணக்கான நபர்கள் தமிழகம் முழுவதும் சாலையோரம் ஆதரவின்றி சுற்றித் திரிகிறார்கள். முதற்கட்டமாக அவர்களை சுத்தம் செய்து சமூக வலைதளங்கள் மூலமாக அவர்களது இல்லம் சேர்க்க, உங்களது அனைவரின் ஒத்துழைப்பும் இன்றியமையாதது. உதவி செய்யName: PASIYILLA TAMIZHAGAMA/c no: 1273135000007931IFSC Code: KVBL0001273BRANCH: Tenkasi branch#பசியில்லா_தமிழகம்_அறக்கட்டளை8883340888www.pasiillathamilaham.com
#இல்லம்_சேர்க்க_உதவுவோம்:தென்காசி பகுதியில் ஆதரவற்று, மனநிலை மாற்றமடைந்தவர் போல் சாலையில் சுற்றித்திரிந்த நபரை நமது #பசியில்லா_தமிழகம் குழுவினர் மீட்டெடுத்து அவரை சுத்தப்படுத்தி புத்தாடைகள் அணிவித்தோம்.அவரிடம் பேசும்பொழுது தனக்கு #இராமேஸ்வரம் என்றும், தனது பெயர் #பாக்கியா என்றும் கூறினார். ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் யாரேனும் இவரை பற்றிய தகவல் தெரிந்தால் நமது #பசியில்லா_தமிழகம் அறக்கட்டளையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.கொரோனா நோய் காலகட்டத்தில் காப்பகத்தில் சேர்ப்பதற்கு மறுத்துவிட்டதால் மீண்டும் அவர் சாலையிலேயே சுற்றித்திரியும் அவல நிலை உள்ளது.உங்களைப் போன்ற #நல்ல_உள்ளங்களின் பொருளாதார உதவியால் மட்டுமே இது போன்ற நபர்களுக்கு மறுவாழ்வு கிடைக்கிறது. உதவி செய்கின்ற அனைத்து நபர்களுக்கும் பசியில்லா தமிழகம் அறக்கட்டளை சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். உதவி செய்யName: PASIYILLA TAMIZHAGAMA/c no: 1273135000007931IFSC Code: KVBL0001273BRANCH: Tenkasi branchபசியில்லா தமிழகம் அறக்கட்டளை8883340888www.pasiillathamilaham.com
#ஆதரவற்றோருக்கு #ஆதரவாய்_இருப்போம்நமது #பசியில்லா_தமிழகம்_அறக்கட்டளை சார்பாக திருநெல்வேலி மாநகராட்சி தற்காலிக முகாமிற்குச் சென்று, அங்குள்ள மக்களை சிகை திருத்தம் செய்து புத்தாடைகள் அணிவித்த போது, அவர்கள் அடைந்த சந்தோசம் நமக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது.lock down ஆரம்பித்த நாட்கள் முதல் இன்று வரை ஆதரவற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை தொடர்ந்து பராமரித்து வரும் #திருநெல்வேலி_மாநகராட்சி #ஆதரவற்றோர்_இல்லம் மற்றும் #R_சோயா_அறக்கட்டளை நிறுவனர் #சரவணன் அவர்களை பசியில்லா தமிழகம் அறக்கட்டளை சார்பாக மனமார வாழ்த்துகிறோம்.இன்னும் இது போன்ற பல பணிகளை செய்வதற்கு காத்துக் கொண்டிருக்கிறோம் இறைவன் நாடினால்…உதவி செய்யName: PASIYILLA TAMIZHAGAMA/c no: 1273135000007931IFSC Code: KVBL0001273BRANCH: Tenkasi branchபசியில்லா தமிழகம் அறக்கட்டளை8883340888www.pasiillathamilaham.com
#மனநலம்_மாற்றம்_அடைந்த_முதியவர் #குடும்பத்துடன்_ஒப்படைக்கப்பட்டது:நேற்று இரவு 10 மணி அளவில் தென்காசி செய்யது சுலைமான் பள்ளிவாசல் அருகே 65 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் இருப்பதாக எனது நண்பன் #ரிபாய் மூலமாக தகவல் வந்தது.உடனடியாக நமது #பசியில்லா_தமிழகம்_அறக்கட்டளை குழுவினர் விரைந்து சென்று அந்த முதியவரை மீட்டெடுத்தோம். அந்த முதியவர் மனநலம் மாற்றமடைந்து பசி மயக்கத்திலும், அழைந்து திரிந்த கிரக்கத்திலும், ஏதேதோ ஊர் பெயரை கூறினார். நண்பன் உணவு வாங்கிக் கொடுத்து, சிறிது நேரம் அவரிடம் தெளிவாக கேட்ட பிறகு கடையம் அருகே #அரியப்பபுரம் என்ற ஊர் பெயரை மட்டும் கூறினார்.நாம் உடனடியாக அரியப்பபுரத்தில் நமது நண்பன் #ஹரிஹரசுதன் அவர்களை தொடர்பு கொண்டு அவரது புகைப்படத்தை அனுப்பி தகவல் சேகரிக்க கூறினோம்.தகவல் அனுப்பிய ஒரு மணி நேரத்திற்குள் அந்த முதியவரை பற்றிய அனைத்து தகவல்களையும் சேகரித்து அனுப்பி விட்டார். கணவர் இல்லாமல், அண்ணன் மகன் வீட்டில் வாழ்ந்து வந்தவர் என்றும், அவரது பெயர் #செல்லக்கனி என்றும், #மைலப்பபுரம் அருகேயுள்ள #சின்னகுமார்பட்டியைச் சேர்ந்தவரென்றும், தகவல் கொடுத்தார்.நமது குழுவினர் அந்த முதியவரை மீட்டெடுத்து அவரது ஊருக்கு அழைத்துச்சென்று, அவரது இல்லத்தில் அவரை ஒப்படைத்தோம். அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். இனிவரும் காலங்களில் அந்த முதியவரை வெளியே எங்கும் செல்லாதவாறு பார்த்துக் கொள்கிறோம் என்று உறுதி கூறினர்.உதவி செய்ய:Name: PASIYILLA TAMIZHAGAMA/c no: 1273135000007931IFSC Code: KVBL0001273BRANCH: Tenkasi branchபசியில்லா தமிழகம் அறக்கட்டளை8883340888www.pasiillathamilaham.com
#தனித்திருப்போம்#தெருத்தெருவாக_விழிப்புணர்வுதென்காசி பகுதியில் பரவிவரும் கொரோனா நோயை கட்டுப்படுத்த சில பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தடைசெய்யப்பட்ட பகுதியில் உள்ள மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய காவல்துறை மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உதவி எண்ணில் தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. பொருள்களுக்கான கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதுமானது.மேலும் அவசர தேவைகளுக்காக மருத்துவமனை செல்ல வேண்டியிருந்தால் காவல்துறை அனுமதி பெற்று நமது பசியில்லா தமிழகம் அறக்கட்டளை சார்பாக இலவசமாக வாகன வசதி ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.மேலும் தடைசெய்யப்பட்ட பகுதியில் மக்கள் பணியாற்ற நமது பசியில்லா தமிழகம் அறக்கட்டளையை சேர்ந்த தன்னார்வலர்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளனர்.தென்காசி தடை செய்யப்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் உதவி எண்ணை தொடர்பு கொண்டு தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.உதவி எண்கள்:99433 1874293455 0445887549 53113மேலும் நமது அறக்கட்டளையைச் சேர்ந்த தன்னார்வலர்களுக்கு தேவையான மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் (Mask, sanitizer, Corona safety dress….etc) வாங்குவதற்கு உங்களது மேலான உதவியை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். உதவி செய்ய:Name: PASIYILLA TAMIZHAGAMA/c no: 1273135000007931IFSC Code: KVBL0001273BRANCH: Tenkasi branchபசியில்லா தமிழகம் அறக்கட்டளை8883340888www.pasiillathamilaham.com