#இருப்பவன்_கொஞ்சம்_தந்தால் #இல்லாத_ஏழை_இல்லையே….பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் காவலாளர்கள், நகராட்சி ஊழியர்கள், ஆதரவு இல்லாமல் தனிமையில் வாழும் முதியவர்கள், மற்றும் ஆதரவில்லாமல் சுற்றித்திரியும் நபர்களுக்கும் மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. தினமும் ஒரு வேளை 250 முதல் 300 நபர்களுக்கும் மேல் உணவு வழங்கப்படுகிறது. பசியில் வாடும் ஒவ்வொரு மனிதனின் பசியை போக்குவதற்கும் உங்களின் உதவியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம். உதவி செய்ய விரும்புபவர்கள் பொருளாகவோ, பணமாகவோ உதவி செய்யலாம்.பசியில்லா தமிழகம் அறக்கட்டளை8883340888www.pasiillathamilaham.comஉதவி செய்ய:Name: PASIYILLA TAMIZHAGAMA/c no: 1273135000007931IFSC Code: KVBL0001273BRANCH: Tenkasi branch
பசியில்லா தமிழகம் சார்பாக தென்காசி பகுதியில் உணவு இல்லாத நபர்களுக்கு மூன்று வேளையும்உணவு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.உணவு தயார் செய்வதற்கு மாஸ்டர் உடனடியாக தேவை.மேலும் பார்சல் போடுவதற்கு volunteers தயாராக உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்.உணவு தேவைப்படுபவர்கள் நம்மை தொடர்பு கொள்ளலாம். மேலும் உதவி செய்ய நினைப்பவர்கள் பணமாகவோ, உணவுக்கு தேவைப்படக்கூடிய பொருள்களாகவோ, பார்சல் போடுவதற்கு தேவையான பொருட்களாகவோ உதவி செய்யலாம்.பசியில்லா தமிழகம் அறக்கட்டளை8883340888www.pasiillathamilaham.comஉதவி செய்ய:Name: PASIYILLA TAMIZHAGAMA/c no: 1273135000007931IFSC Code: KVBL0001273BRANCH: Tenkasi branch
குவைத் நாட்டில் பணிபுரியும் நமது தமிழகத்தை சேர்ந்த நண்பர்கள் சரணாலயம் POWER OF TAMIL ANGELஎன்ற அமைப்பை நிறுவி நமது தமிழகத்தில் உள்ள மக்களுக்கு பல நல்ல சேவைகளை செய்து வருகின்றனர். கடந்த மாதம் அந்த அமைப்பைச் சார்ந்த நண்பர்கள் நம்மை தொடர்பு கொண்டு ஏதேனும் உதவி வேண்டுமா என்று கேட்டனர். திருநெல்வேலி மாநகராட்சி ஆதரவற்றோர் இல்லத்தில் இருக்கும் முதியவர்களுக்கு கட்டில் வேண்டுமென்றும், மேலும் அவர்கள் உறங்கும் அறையில் கொசு வலை அமைத்து தருமாறு கேட்டுக்கொண்டோம். உடனடியாக அவர்கள் அதற்கான தொகை 10,500 நம்மிடம் அனுப்பிவைத்து அவர்களுக்குத் தேவையான கட்டில் மற்றும் கொசுவலை அடித்து கொடுக்குமாறு கூறினார். நமது குழுவினர் திருநெல்வேலி சென்று அவர்களுக்கு செய்து கொடுத்தோம். ஆதரவு இல்லாத முதியவர்கள் அந்த அமைப்பைச் சார்ந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.பசியில்லா தமிழகம் அறக்கட்டளை8883340888www.pasiillathamilaham.comஉதவி செய்ய:Name: PASIYILLA TAMIZHAGAMA/c no: 1273135000007931IFSC Code: KVBL0001273BRANCH: Tenkasi branch
தென்காசி அருகே வேதம் புதூர் பகுதியில் ஆதரவு இல்லாமல் மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் சுற்றித்திரிந்த #சுலைகாள்_பீவி என்ற 65 வயது மதிக்கத்தக்க பெண் இருந்தார். பொதுமக்கள் ஒத்துழைப்புடன் இந்த முதியவரை மீட்டு, தென்காசி காவல்துறை ஆய்வாளர் #திரு_ஆடிவேல் ஐயா அவர்கள் ஒத்துழைப்புடன் #GENERAL_MEMO வாங்கி திண்டுக்கல் அருகே உள்ள #புனித_ஜோசப்_கருணை இல்லத்தில் சேர்த்துள்ளோம்.உதவி செய்த வேதம்புதூர் பொதுமக்களுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும், காப்பக நிறுவன ஊழியர்களுக்கும், #பசியில்லா_தமிழகம்_அறக்கட்டளை சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்பசியில்லா தமிழகம் அறக்கட்டளை8883340888www.pasiillathamilaham.comஉதவி செய்ய:Name: PASIYILLA TAMIZHAGAMA/c no: 1273135000007931IFSC Code: KVBL0001273BRANCH: Tenkasi branch
நமது பசியில்லா தமிழகத்தின் உறுப்பினர் சென்னை அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த #அப்துல் அவர்கள் நம்மை தொடர்புகொண்டு அவரது பகுதியில் 28 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் சாலையில் ஆதரவில்லாமல் சுற்றிக் கொண்டிருக்கிறார் என்ற தகவல் அளித்தார். நாம் உடனடியாக சென்னையில் சிறப்பாக பணி செய்து கொண்டிருக்கும் #கருணை_உள்ளங்கள் நிறுவனர் #அருள் அண்ணன் அவர்களை தொடர்பு கொண்டோம்.கருனை உள்ளங்கள் அமைப்பைச் சேர்ந்த #செந்தில்_அண்ணன் மற்றும் #சகோதரி_நந்தினி உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த நபரை மீட்டனர். அவர்கள் விசாரித்ததில் அந்தப் பெண்ணின் பெயர்#சூரியகலா என்று தெரியவந்தது. அவர் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் அல்ல. மிகுந்த மன அழுத்தத்தினால் குடும்பத்தை விட்டு வெளியேறி மூன்று நாட்களாக சாலையில் திரிந்து கொண்டிருக்கிறார். அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சூரியகலாவை தொடர்ந்து அனைத்து பகுதியிலும் அவர்கள் தேடிக்கொண்டு இருந்தனர்.செந்தில் அண்ணன் உடனடியாக அவர்கள் குடும்பத்திற்கு தகவல் தெரிவித்து அவர்களை வரவழைத்து #அரும்பாக்கம்_காவல்_துறையினர் மூலமாக அவர்களது குடும்பத்துடன் ஒப்படைத்தனர்.உதவி செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் பசியில்லா தமிழகம் மற்றும் கருனை உள்ளங்கள் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.பசியில்லா தமிழகம் அறக்கட்டளை8883340888www.pasiillathamilaham.comஉதவி செய்ய:Name: PASIYILLA TAMIZHAGAMA/c no: 1273135000007931IFSC Code: KVBL0001273BRANCH: Tenkasi branch