Karunai payanam Crossed 112 days in chennai..

Pasi illa tamilaham

கருணை பயணம் 100 நாட்களை கடந்த நிலையில் தொடர்ந்து பணிகள் இருப்பதால் நாட்களை அதிகரித்து விட்டோம். தற்போது 112 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இது போன்று பல பணிகளை செய்வதற்கு தயாராக உள்ளோம் அதற்கு உங்களது மேலான உதவியை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.பசியில்லா தமிழகம் அறக்கட்டளை8883340888www.pasiillatamilaham.com

Posted by Pasi illa Tenkasi on Thursday, December 26, 2019

Pasi Illa Tamilaham Trust serves with #Uravugal Trust @chennai

பசியில்லா தமிழகம் அறக்கட்டளை

நமது பசியில்லா தமிழகத்தின் கருணை பயணம் சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.சென்னையில் ஆதரவற்ற உடல்களை நல்லடக்கம் செய்யும் #உறவுகள்_டிரஸ்ட் அவர்களுடன் பணியாற்றினோம்…சென்னை பகுதியில் ஆதரவற்று இறந்து கிடக்கும் நபர்களை அரசு அனுமதியுடன் நல்லடக்கம் செய்யும் பணியை நமது கருணை பயணம் குழுவினர் மேற்கொண்டோம்.ஆதரவற்ற மூன்று நபர்களின் உடல்கள் #உறவுகள்_டிரஸ்ட் மற்றும் பசியில்லா தமிழகம் அறக்கட்டளை மூலம் நல்லடக்கம் செய்யப்பட்டது.#பசியில்லா_தமிழகம்_அறக்கட்டளை8883340888www.pasiillatamilaham.com

Posted by Pasi illa Tenkasi on Sunday, December 22, 2019

Thanks to all for your full support..

பசியில்லா தமிழகம் 8883340888

உதவி செய்த அனைவருக்கும் நன்றி:தென்காசி மாவட்ட பகுதியில் HIV நோயினால் பாதிக்கப்பட்ட 23 வயது பெண்மணி ஆதரவற்று பெற்றோர்கள் இல்லாமல், உறவினர்கள் இல்லாமல் இருந்தார்.தென்காசி அரசு மருத்துவமனையில் தாய் தந்தையர் அன்பு இல்லம் நடத்திவரும் #மும்தாஜ் அவர்கள் இந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் பராமரித்து வந்தார்.பின்பு வடகரை பகுதியைச் சார்ந்த #இஸ்மாயில் அண்ணன் அவர்கள் மூலமாக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை மேற்கொண்டு இந்தப் பெண்ணை பெங்களூர் வரை அழைத்துச் சென்று முறையான காப்பகத்தில் சேர்த்து வைக்கப்பட்டது.தென்காசி கீழப்புலியூர் பகுதியைச் சார்ந்த நமது சகோதரி #மகேஷ் அவர்கள் திருநெல்வேலியில் இந்தப் பெண்ணை கூடவே இருந்து கவனித்துக்கொண்டார்.அனைத்து வகையிலும் உதவியாக இருந்து உடனடியாக #GENERAL_MEMO அளித்து உதவிய தென்காசி காவல்துறை ஆய்வாளர் #ஆடிவேல் ஐயா அவர்களுக்கும், காவலர் #இராமச்சந்திரன் ஐயா அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.பசியில்லா தமிழகம் அறக்கட்டளை8883340888www.pasiillatamilaham.com

Posted by Pasi illa Tenkasi on Saturday, December 21, 2019

We proud of Bharathiyar metric. school student..

நமது கருணை பயணத்தில் சென்னை #கூடுவாஞ்சேரி_பாரதியார் #மெட்ரிகுலேஷன்_பள்ளியில்_எட்டாவது படிக்கும் மாணவன் #முகமது_அஜ்மல் அவர்கள் கலந்துகொண்டு சாக்கடையில் குப்பையோடு குப்பையாக, தான் மனிதன் என்பதையும் மறந்து, பசியோடும், பயத்தோடும், அழுக்கோடும் கிடந்த நபரை மீட்டெடுத்து மறுவாழ்வு கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.வருங்கால இந்தியா இது போன்ற இளைஞர்கள் கையில்… நிச்சயமாக வளமான சமுதாயத்தை உருவாக்கும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது.மனிதம் கற்றுக்கொடுக்கும் பள்ளிக்கு மனமார்ந்த நன்றி…பசியில்லா தமிழகம் அறக்கட்டளை8883340888www.pasiillatamilaham.com

Posted by Pasi illa Tenkasi on Thursday, December 19, 2019

Karuani payanam continues in Chennai

பசியில்லா தமிழகத்தின் கருணை பயணம் சென்னையில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.சென்னை புழல் அருகே சாலையோரம் ஆதரவற்று பராமரிப்பின்றி சுற்றித்திரிந்த எந்த மொழி என்றே பேசத் தெரியாத ஒரு நபரை மீட்டு அவரை சுத்தப்படுத்தி புத்தாடைகள் அணிவித்து, காவல்துறையில் #GENERAL_MEMO போட்டு, அடையாறு ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்து வைக்கப் பட்டது.சென்னையில் சகோதரி #விக்டோரியா அவர்கள் நமது கருணை பயணத்தில் பங்கு எடுத்து அனைத்து பணிகளையும் முன்னெடுத்து செய்தார்.சென்னையில் நமக்கு அனைத்து வகையிலும் ஒத்துழைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் #கருணை_உள்ளங்கள் குழுவினருக்கும், கருணை உள்ளம் கொண்ட #செந்தில்_அண்ணன் மற்றும் #அப்பாஸ் அவர்களுக்கும் பசியில்லா தமிழகத்தின் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.கருணை பயணத்திற்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.பசியில்லா தமிழகம் அறக்கட்டளை8883340888www.pasiillatamilaham.com

Posted by Pasi illa Tenkasi on Tuesday, December 17, 2019

Emergency help needed

#அவசர_உதவி_தேவை:தென்காசி மாவட்ட பகுதியில் HIV நோயினால் பாதிக்கப்பட்ட 23 வயது பெண்மணி ஆதரவற்று பெற்றோர்கள் இல்லாமல், உறவினர்கள் இல்லாமல் உள்ளார். தமிழகத்தில் எங்கு தேடியும் எச்ஐவி காப்பகம் எங்கும் இல்லை. இருக்கும் ஒருசில காப்பகத்திலும் சேர்க்க மறுக்கிறார்கள். வலியின் உச்சகட்டத்தை தாங்கிக்கொண்டு மரணத்தைத் தொட்டு கொண்டு ஆதரவற்று இருக்கிறார்.இந்த வீடியோவை பார்க்கும் யாரோ ஒருவர் மூலம் சரியான காப்பகம் கிடைத்து இந்த பெண்ணுக்கான மறுவாழ்வு கிடைக்க உதவவும்.இந்தச் செய்தி உடனடியாக இந்தத் துறை சார்ந்த உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தவும், அவர்கள் மூலம் நிச்சயமாக இந்தப் பெண் காப்பாற்றபட வேண்டும். பசியில்லா தமிழகம் அறக்கட்டளை8883340888www.pasiillatamilaham.com

Posted by Pasi illa Tenkasi on Monday, December 16, 2019

Karunai payanam in Chennai

பசியில்லா தமிழகத்தின் கருணை பயணம் சென்னையில் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.தாம்பரம் அருகே சாலை ஓரத்தில் ஆதரவில்லாமல் பராமரிப்பின்றி அழுக்கு தோற்றத்துடன் சுற்றித் திரிந்து கொண்டிருந்த ஒரு நபரை மீட்டு, அவரை சுத்தம் செய்து புத்தாடைகள் அணிவித்தோம்.பின்பு தாம்பரம் காவல் நிலையம் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் GENERAL MEMO பெற்று சென்னை ஆவடி அருகே உள்ள பரிசுத்த நற்கருணை இல்லத்தில் அந்த நபரை சேர்த்து மறுவாழ்வு அளித்துள்ளோம்.உடனடியாக GENERAL MEMO வழங்கிய தாம்பரம் S11 காவல்நிலைய காவல்துறை ஆய்வாளர் அவர்களுக்கும், உதவி ஆய்வாளர்கள் அவர்களுக்கும் பசியில்லா தமிழகத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.பசியில்லா தமிழகம் அறக்கட்டளை8883340888www.pasiillatamilaham.com

Posted by Pasi illa Tenkasi on Saturday, December 14, 2019

A meet by Tamil Pasanga Team

மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு கும்பகோணத்தில் தமிழ் பசங்க குழுவினர்கள் மூலமாக நடைபெறும் பாரதியின்…

Posted by Pasi illa Tenkasi on Saturday, December 14, 2019

An award function at Karaikudi…

#மகாகவி_பாரதியார் அவர்களின் எள்ளுப்பேரன் #நிரஞ்சன்_பாரதி மற்றும் கவிச்சுடர் #கவிதைப்பித்தன் மேனாள் சட்டமன்ற உறுப்பினர்…

Posted by Pasi illa Tenkasi on Sunday, December 8, 2019

Journey towards success…

பசியில்லா தமிழகம் அறக்கட்டளையின் 100 நாட்கள் கருணை பயணம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி பகுதியில் ஆதரவற்று சாலையோரம் சுற்றித் திரிந்த ஒரு நபரை சுத்தம் செய்து அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தோம்.இதனைப் பார்த்த வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் நம்மை தொடர்பு கொண்டு இந்த புகைப்படத்தில் இருக்கும் நபர் எனது மகன் என்று கூறினார்.சுமார் 12 வருடங்களுக்கு முன்பு வேலூரில் மனநலம் சரியில்லாத நிலையில் குடும்பத்தை விட்டு வழிதவறி சென்றுவிட்டார் என்றும்,நீங்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு நபர் எனது மகன் ஐயப்பன் என்றும் கூறினார். உடனடியாக பசியில்லா தமிழகம் அறக்கட்டளை குழுவினர் அந்த ஐயப்பன் என்ற நபரை தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் மனிதம் விதைப்போம் அறக்கட்டளையின் நண்பர்கள் உதவியுடன் தென்காசி வரவழைத்து தென்காசி காவல் துறையினர் மூலம் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.குடும்பம் மிகவும் வறுமை நிலையில் இருப்பதால் வேலூர் பகுதியில் ஏபிஜே பிரண்ட்ஸ் அண்ட் பிரதர்ஸ் அறக்கட்டளை சார்பாக வேலூர் பகுதியை சேர்ந்த நண்பர்கள் வாகனம் மூலம் தென்காசி வந்து அவர்களை அழைத்துச் சென்று வாணியம்பாடியில் சென்று சேர்க்க உள்ளார்.முதற்கட்டமாக விழுப்புரம் அருகே உள்ள அன்பு ஜோதி ஆசிரமத்திற்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்படுகிறார்.பசியில்லா தமிழகம் அறக்கட்டளை8883340888

Posted by Pasi illa Tenkasi on Wednesday, December 4, 2019
Translate »