www.pasiillatamilaham.com#மறுவாழ்வு_கிடைக்க_வழி_செய்யுங்கள்:பசியில்லா தமிழகத்தின் கருணை பயணத்தில் #சங்கரன்கோவில் பகுதியில் நீதிமன்ற வாசலில் ஆதரவில்லாமல் மனநலம் பாதிக்கப்பட்டு ஊனமுற்ற நிலையில் இருந்த நபரை மீட்டெடுத்தோம்.பல துறையைச் சார்ந்த அதிகாரிகள் தினமும் வந்து செல்லும் நீதிமன்ற வாசலில் பல வருடங்களாக ஆதரவில்லாமல் இருக்கிறார். எந்த துறையும் கண்டுகொள்ளவில்லை.நமது மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்கான காப்பகங்கள் போதுமான அளவு இல்லை. மேலும் இந்த நபரை சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் சேர்ப்பதற்கு பலதுறை சார்ந்த அதிகாரிகளின் ஒத்துழைப்பு தேவை படுகிறது.சரியான உணவு இல்லாமல், இருந்த இடத்திலேயே சிறுநீர் மலம் கழித்து, மலத்தை ஒரு பாத்திரத்தில் அள்ளி வைத்துள்ளார். அருகே செல்ல முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது.உடனடியாக காப்பகத்தில் சேர்ப்பதற்கு முயற்சிகள் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் அவரை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. கிட்ட நெருங்க முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது.இதே நிலை நீடித்தால் விரைவில் மரணித்து விடுவார். நமது கருணை பயணத்தில் பங்கேற்பதற்காக கோவையிலிருந்து வருகை தந்து இரண்டு நாட்கள் தங்கி நம்முடன் இணைந்து சேவையாற்றிய #திரு_பிரபாகரன் மற்றும் #திரு_செழியன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.இறைவன் நாடினால் தொடர்ந்து கருணை பயணம் தமிழகம் முழுவதும் விரைவில்….*பசியில்லா தமிழகம் அறக்கட்டளை**8883340888*www.pasiillathamilaham.com
Posted by Pasi illa Tenkasi on Sunday, February 9, 2020







Views Today : 3
Views Yesterday : 5
Views This Month : 21
Views This Year : 588
Total views : 24663
Who's Online : 0




