Pasi illa tamilahamநமது பசியில்லா தமிழகத்தின் உறுப்பினர் சென்னை அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த #அப்துல் அவர்கள் நம்மை தொடர்புகொண்டு அவரது பகுதியில் 28 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் சாலையில் ஆதரவில்லாமல் சுற்றிக் கொண்டிருக்கிறார் என்ற தகவல் அளித்தார். நாம் உடனடியாக சென்னையில் சிறப்பாக பணி செய்து கொண்டிருக்கும் #கருணை_உள்ளங்கள் நிறுவனர் #அருள் அண்ணன் அவர்களை தொடர்பு கொண்டோம்.கருனை உள்ளங்கள் அமைப்பைச் சேர்ந்த #செந்தில்_அண்ணன் மற்றும் #சகோதரி_நந்தினி உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த நபரை மீட்டனர். அவர்கள் விசாரித்ததில் அந்தப் பெண்ணின் பெயர்#சூரியகலா என்று தெரியவந்தது. அவர் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் அல்ல. மிகுந்த மன அழுத்தத்தினால் குடும்பத்தை விட்டு வெளியேறி மூன்று நாட்களாக சாலையில் திரிந்து கொண்டிருக்கிறார். அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சூரியகலாவை தொடர்ந்து அனைத்து பகுதியிலும் அவர்கள் தேடிக்கொண்டு இருந்தனர்.செந்தில் அண்ணன் உடனடியாக அவர்கள் குடும்பத்திற்கு தகவல் தெரிவித்து அவர்களை வரவழைத்து #அரும்பாக்கம்_காவல்_துறையினர் மூலமாக அவர்களது குடும்பத்துடன் ஒப்படைத்தனர்.உதவி செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் பசியில்லா தமிழகம் மற்றும் கருனை உள்ளங்கள் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.பசியில்லா தமிழகம் அறக்கட்டளை8883340888www.pasiillathamilaham.comஉதவி செய்ய:Name: PASIYILLA TAMIZHAGAMA/c no: 1273135000007931IFSC Code: KVBL0001273BRANCH: Tenkasi branch
Posted by Pasi illa Tenkasi on Wednesday, February 26, 2020







Views Today : 3
Views Yesterday : 5
Views This Month : 21
Views This Year : 588
Total views : 24663
Who's Online : 0




