மனநலம் பாதிக்கப்பட்ட தாயுடன் மூன்று நாட்கள் உணவு இல்லாமல் பசியுடன் இருந்த_8_மாத குழந்தை

நாங்கள் இருக்கிறோம் அசோக்

#மனநலம்_பாதிக்கப்பட்ட_தாயுடன் #மூன்று_நாட்கள்_உணவு_இல்லாமல் #பசியுடன்_இருந்த_8_மாத_குழந்தை:தென்காசி அருகே குத்துக்கல்வலசை பகுதியில் வடமாநிலத்தில் இருந்து கூர்க்கா வேலை செய்யும் #ஹரேந்திர_பகதூர்_சிங் என்ற நபர் தனது மனைவி #செல்வி_பெருமாள் மற்றும் #அசோக் என்ற எட்டு மாத ஆண் குழந்தையுடன் குடும்பத்தோடு வசித்து வந்தார். அந்தப் பெண்ணுக்கு TB (காசநோய்) வந்ததும், கைக்குழந்தையும் மனைவியையும் அனாதையாக விட்டு விட்டு வட மாநிலத்திற்கு சென்று விட்டார். மூன்று மாதங்களுக்கு மேல் தனிமையிலிருந்து கிடைக்கும் உணவை உண்டு வாழ்ந்து வந்துள்ளனர். கடந்த சில மாதங்களாகவே குழந்தையின் தாய் மனநலம் பாதிக்கப்பட்டு கைக்குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். பசியின் கொடுமையால் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மேல் அந்த 8 மாத குழந்தை கதறி அழுதுள்ளது. குழந்தையின் தொடர் அழுகையை கேட்ட அக்கம்பக்கத்தினர் அந்த குழந்தைக்கு தேவையான உணவுகளை கொடுத்து, மனநலம் பாதிக்கப்பட்ட அந்த தாயை தொடர்ந்து பாதுகாத்து வந்துள்ளனர். ஊர் மக்கள் மூலமாக நமது #பசியில்லா_தமிழகத்திற்கு தகவல் வந்தது. நமது குழுவினர் விரைந்து சென்று அவர்களை மீட்டெடுத்து தொடர்ந்து நான்கு நாட்கள் தென்காசி அரசு மருத்துவமனை அழைத்து சென்று அவர்களுக்கு தேவையான முதலுதவி அனைத்தையும் செய்து, அவர்களை காசநோய் பிரிவில் சேர்த்து அவர்களுக்கான மருந்து மாத்திரைகளை வாங்கிக் கொடுத்தோம்.இந்தக் குழந்தையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நமது தென்காசி பகுதி காவல் ஆய்வாளர் #திரு_ஆடிவேல் ஐயா அவர்களின் உடனடி முயற்சியில், அந்த குழந்தையையும், தாயையும் திருநெல்வேலி மாநகராட்சி தற்காலிக சிறப்பு முகாமில் சேர்த்துள்ளோம்.தென்காசி காவல்நிலைய எழுத்தாளர் #திரு_ராஜேந்திரன் ஐயா அவர்கள் அதற்கான GENERAL MEMO வை உடனடியாக கொடுத்து உதவினார்கள்.ஏற்கனவே திருநெல்வேலி மாநகராட்சியில் ஆதரவில்லாத முதியவர்கள் வாழ்ந்து வந்த நிலையில், எட்டு மாத கைக்குழந்தை அசோக் அவர்களுக்கு கிடைத்ததில் பெருமகிழ்ச்சி கொண்டு அனைவரும் அவர்களுடன் விளையாடியது மனதை வருடிய சம்பவமாக இருந்தது.குழந்தை மீட்கப்பட்ட நாள் முதல் காப்பகத்தில் சேர்க்கும் வரை அனைத்து வகையிலும் வழிகாட்டிய திருநெல்வேலி மாநகராட்சி ஆதரவற்றோர் இல்லம் மற்றும் #R_SOYA_அறக்கட்டளை நிறுவனர் #சரவணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.உதவி செய்ய:Name: PASIYILLA TAMIZHAGAMA/c no: 1273135000007931IFSC Code: KVBL0001273BRANCH: Tenkasi branch#பசியில்லா_தமிழகம்_அறக்கட்டளை8883340888www.pasiillathamilaham.com

Posted by Pasi illa Thamilaham on Friday, May 29, 2020