பசியில்லா தமிழகம்#மனநலம்_மாற்றம்_அடைந்த_முதியவர் #குடும்பத்துடன்_ஒப்படைக்கப்பட்டது:நேற்று இரவு 10 மணி அளவில் தென்காசி செய்யது சுலைமான் பள்ளிவாசல் அருகே 65 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் இருப்பதாக எனது நண்பன் #ரிபாய் மூலமாக தகவல் வந்தது.உடனடியாக நமது #பசியில்லா_தமிழகம்_அறக்கட்டளை குழுவினர் விரைந்து சென்று அந்த முதியவரை மீட்டெடுத்தோம். அந்த முதியவர் மனநலம் மாற்றமடைந்து பசி மயக்கத்திலும், அழைந்து திரிந்த கிரக்கத்திலும், ஏதேதோ ஊர் பெயரை கூறினார். நண்பன் உணவு வாங்கிக் கொடுத்து, சிறிது நேரம் அவரிடம் தெளிவாக கேட்ட பிறகு கடையம் அருகே #அரியப்பபுரம் என்ற ஊர் பெயரை மட்டும் கூறினார்.நாம் உடனடியாக அரியப்பபுரத்தில் நமது நண்பன் #ஹரிஹரசுதன் அவர்களை தொடர்பு கொண்டு அவரது புகைப்படத்தை அனுப்பி தகவல் சேகரிக்க கூறினோம்.தகவல் அனுப்பிய ஒரு மணி நேரத்திற்குள் அந்த முதியவரை பற்றிய அனைத்து தகவல்களையும் சேகரித்து அனுப்பி விட்டார். கணவர் இல்லாமல், அண்ணன் மகன் வீட்டில் வாழ்ந்து வந்தவர் என்றும், அவரது பெயர் #செல்லக்கனி என்றும், #மைலப்பபுரம் அருகேயுள்ள #சின்னகுமார்பட்டியைச் சேர்ந்தவரென்றும், தகவல் கொடுத்தார்.நமது குழுவினர் அந்த முதியவரை மீட்டெடுத்து அவரது ஊருக்கு அழைத்துச்சென்று, அவரது இல்லத்தில் அவரை ஒப்படைத்தோம். அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். இனிவரும் காலங்களில் அந்த முதியவரை வெளியே எங்கும் செல்லாதவாறு பார்த்துக் கொள்கிறோம் என்று உறுதி கூறினர்.உதவி செய்ய:Name: PASIYILLA TAMIZHAGAMA/c no: 1273135000007931IFSC Code: KVBL0001273BRANCH: Tenkasi branchபசியில்லா தமிழகம் அறக்கட்டளை8883340888www.pasiillathamilaham.com
Posted by Pasi illa Thamilaham on Monday, June 29, 2020







Views Today : 3
Views Yesterday : 5
Views This Month : 21
Views This Year : 588
Total views : 24663
Who's Online : 0




