Thanks to Chennai mobiles

The Chennai mobiles

#நான்_பார்த்து_வியந்த_மனிதர்தமிழகம் முழுவதும் பல கிளைகளைக் கொண்டுள்ள #தி_சென்னை_மொபைல்ஸ் ன் உரிமையாளர் #சம்சு_அலி அவர்கள், கொரோனா நோய் பாதிப்பிலிருந்து மக்களை மீட்க நமது அரசு 144 தடை சட்டம் மூலம் மக்களை பாதுகாப்பாக வீட்டில் இருக்கும் படி அறிவுறுத்தி இருக்கிறது.இந்த நிலையில் மக்களை பாதுகாக்கும் காவல்துறைக்கும், நகராட்சி ஊழியர்களுக்கும், ஆதரவில்லாமல் சாலையோரம் சுற்றித்திரியும் நபர்களுக்கும் #கோவை பகுதி முழுவதும் #தி_சென்னை_மொபைல்ஸ் சார்பாக தினமும் 500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு சுவையான உணவு, வாட்டர் பாட்டில், பிரட், பிஸ்கட் இன்னும் பல வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து கோவையை பசியில்லாத கோவையாக மாற்றுவதற்கு அனைத்து வகையிலும் முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறார்.மக்களின் கஷ்டத்தை உணர்ந்து அந்த நிறுவனத்தின் உரிமையாளர் களத்திற்கு வந்து மக்களோடு மக்களாக அவர்களின் உணர்வுகளைப் புரிந்து, அவர்களின் தேவைகளை கேட்டறிந்து, அவர்களுக்கான உதவியை செய்து கொண்டிருக்கிறார்.கோவை பகுதி முழுவதும் தனது சொந்த பணத்தில் தினமும் மக்களை நேரடியாக சந்தித்து 500 நபர்களுக்கும் மேல் தனது உதவியை செய்து கொண்டிருக்கிறார்.#அவர்_கூறியதில்_எனக்கு_பிடித்த_விஷயம்:இந்த மக்களிடமிருந்து தான் நியாயமான முறையில் நான் சம்பாதித்தேன்.அதை மீண்டும் அதே மக்களுக்கு நான் செலவும் செய்கிறேன்.என்பதுதான்.கொரோனாவை இந்த உலகத்தை விட்டு விரட்டும் வரை நமது பயணமும் நிச்சயம் தொடரும். பசியில்லா தமிழகம் அறக்கட்டளை8883340888www.pasiillathamilaham.comஉதவி செய்ய:Name: PASIYILLA TAMIZHAGAMA/c no: 1273135000007931IFSC Code: KVBL0001273BRANCH: Tenkasi branch

Posted by Pasi illa Thamilaham on Wednesday, April 1, 2020