We found an old man from Rameshwaram, Friends if you know him kindly contact us

இராமேஸ்வரம் நண்பர்களின் கவனத்திற்கு

#இல்லம்_சேர்க்க_உதவுவோம்:தென்காசி பகுதியில் ஆதரவற்று, மனநிலை மாற்றமடைந்தவர் போல் சாலையில் சுற்றித்திரிந்த நபரை நமது #பசியில்லா_தமிழகம் குழுவினர் மீட்டெடுத்து அவரை சுத்தப்படுத்தி புத்தாடைகள் அணிவித்தோம்.அவரிடம் பேசும்பொழுது தனக்கு #இராமேஸ்வரம் என்றும், தனது பெயர் #பாக்கியா என்றும் கூறினார். ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் யாரேனும் இவரை பற்றிய தகவல் தெரிந்தால் நமது #பசியில்லா_தமிழகம் அறக்கட்டளையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.கொரோனா நோய் காலகட்டத்தில் காப்பகத்தில் சேர்ப்பதற்கு மறுத்துவிட்டதால் மீண்டும் அவர் சாலையிலேயே சுற்றித்திரியும் அவல நிலை உள்ளது.உங்களைப் போன்ற #நல்ல_உள்ளங்களின் பொருளாதார உதவியால் மட்டுமே இது போன்ற நபர்களுக்கு மறுவாழ்வு கிடைக்கிறது. உதவி செய்கின்ற அனைத்து நபர்களுக்கும் பசியில்லா தமிழகம் அறக்கட்டளை சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். உதவி செய்யName: PASIYILLA TAMIZHAGAMA/c no: 1273135000007931IFSC Code: KVBL0001273BRANCH: Tenkasi branchபசியில்லா தமிழகம் அறக்கட்டளை8883340888www.pasiillathamilaham.com

Posted by Pasi illa Thamilaham on Friday, July 10, 2020