பயணத்தில் உதவிய நண்பர்-கௌஸ் – Pasi illa tamilaham
நமது கருணைப் பயணம் திருநெல்வேலி பகுதியில் தொடர்ந்து கொண்டிருந்த வேளையில் திருநெல்வேலி பேட்டை பகுதியைச் சார்ந்த நமது நண்பர் #கெளஷ் என்பவர் இரண்டு நாட்களாக நமது #பசியில்லா_தமிழகம் குழுவினர்க்கு உணவு வழங்கினார்கள்.அதுமட்டுமல்ல அவரது திருமண நாளை முன்னிட்டு நாங்கள் தங்கியிருந்த காப்பகத்தில் உள்ள ஆதரவு இல்லாத 40 முதியவர்களுக்கு மதிய உணவு வழங்கினார்.அதுமட்டுமின்றி நாங்கள் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு கொண்டிருந்த போது இரண்டு நாட்கள் நம்முடன் இணைந்து பணியாற்றினார்.நமது கருணைப் பயணம் திருநெல்வேலியில் இனிதே நடைபெற நமது குழுவினர்க்கு அனைத்து வகையிலும் உதவி புரிந்த இவர்களுக்கு பசியில்லா தமிழகம் சார்பாகவும், மற்றும் திருநெல்வேலி மாநகராட்சி ஆதரவற்றோர் இல்லம், R SOYA அறக்கட்டளை சார்பாகவும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறோம்.
Posted by Pasi illa Tenkasi on Sunday, September 15, 2019






Views Today :
Views Yesterday : 5
Views This Month : 144
Views This Year : 1023
Total views : 25098
Who's Online : 0




