தென்காசி பகுதியில் கொரோனா நோயால் தனிமைப் படுத்தப்பட்டிருக்கும் நடுப்பேட்டை தெரு மக்களுக்கு #COVID_RELIEF_FORCE ஐ சார்ந்த நண்பர் ரியாஸ் அவர்களின் சார்பாக நமது #பசியில்லா_தமிழகம் மூலம் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.தென்காசி காவல்துறை உதவி ஆய்வாளர் #திரு_முத்துகிருஷ்ணன் ஐயா அவர்கள் பொதுமக்களுக்கு கொரோனா நோய் குறித்து அச்சப்படாமல் இருப்பது குறித்தும் மற்றும் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.மேலும் நமது பசியில்லா தமிழகம் அறக்கட்டளை குழுவினர்களுக்கு பாதுகாப்பு வழிமுறைகளை குறித்து அறிவுரைகள் வழங்கி, தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபட பாதுகாப்பு மிக முக்கியம் என்பதை உணர்த்தி சென்றார். காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.முத்துகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கு பசியில்லா தமிழகம் அறக்கட்டளை சார்பாகவும், COVID RELIEF FORCE சார்பாகவும், தென்காசி பொதுமக்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.உதவி செய்ய:Name: PASIYILLA TAMIZHAGAMA/c no: 1273135000007931IFSC Code: KVBL0001273BRANCH: Tenkasi branchபசியில்லா தமிழகம் அறக்கட்டளை8883340888www.pasiillathamilaham.com
#இதுபோன்ற_அதிகாரிகளும் #இருக்கிறார்கள்:மனநலம் மற்றும் காசநோயால் பாதிக்க பட்ட தாயுடன், மூன்று நாட்கள் உணவுக்காக கதறி அழுத 8 மாத ஆண் குழந்தையை பொதுமக்கள் கொடுத்த தகவலின் மூலம், #பசியில்லா_தமிழகம் குழுவினர்கள், தென்காசி காவல் ஆய்வாளர் #திரு_ஆடிவேல் ஐயா அவர்களின் அனுமதியுடன் இருவருக்கும் மருத்துவ உதவி அளித்து, திருநெல்வேலி ஆதரவற்றோர் காப்பகத்தில் சேர்த்துள்ளோம். இதனை அறிந்த தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்ட துணை இயக்குனர் #DR_வெள்ளைச்சாமி, மருத்துவ பணிகள்,#திரு_ராக்லண்ட் ஜிம் DRTB,TBHIV,முதன்மை சிகிச்சை மேற்பார்வையாளர்கள் #திரு_முத்துராஜா மற்றும் #திரு_முருகன் ஆகியோர் பாதிக்கப்பட்ட இருவரையும் நேரில் சென்று, மருத்துவ பரிசோதனை செய்து, மற்றும் அவர்களுக்கான பொருளாதார உதவியையும் அளித்துள்ளார்கள். உயர் அதிகாரியாக இருந்தாலும், பல பணிகளுக்கு இடையிலும் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தது, உதவியும் ஆறுதலும் வழங்கியது நமக்கு புத்துணர்வு அளித்தது. உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு சென்ற நமது நண்பர் #ஹாஜா அவர்களுக்கும், இது போன்ற பல நபர்களை பராமரித்து கொண்டிருக்கும் #திருநெல்வேலி_மாநகராட்சி #ஆதரவற்றோர்_இல்லம் மற்றும் #R_சோயா அறக்கட்டளை நிறுவனர் #திரு_சரவணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.உதவி செய்ய:Name: PASIYILLA TAMIZHAGAMA/c no: 1273135000007931IFSC Code: KVBL0001273BRANCH: Tenkasi branchபசியில்லா தமிழகம் அறக்கட்டளை8883340888www.pasiillathamilaham.com
#2மாத_குழந்தைக்காக_இறைவனிடம்வேண்டிக்_கொண்ட_அனைவருக்கும்_நன்றி: சுமார் 20 நாட்களுக்கு முன்பாக 2மாத குழந்தைக்கு கிட்னி ஃபெயிலியர் மருத்துவ சிகிச்சைக்காக நிதி வேண்டி முகநூலில் பதிவிட்டு இருந்தோம்.முகநூல் நண்பர்கள் மூலம் 2 லட்சத்து 75 ஆயிரம் வரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் நமது நண்பர்கள் அனைவரும் அந்தக் குழந்தைக்காக இறைவனிடம் வேண்டிக் கொண்டதால், இறைவன் நாடியதால் அந்த குழந்தை தற்போது நல்ல நிலையில் உள்ளது. சிகிச்சை முடிந்து குழந்தை வீடு திரும்பியுள்ளது. மீண்டும் சிகிச்சை குறித்த முடிவு வருவதற்கு இரண்டு மாதங்கள் ஆகும் என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். தொடர்ந்து அந்த குழந்தை கவனமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொருளாதார உதவி மற்றும் பிராத்தனை செய்த உங்களுக்கு, அந்தக் குடும்பத்தின் சார்பாகவும், தென்காசி பொது மக்கள் சார்பாகவும், பசியில்லா தமிழகம் அறக்கட்டளை சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.உதவி செய்ய:Name: PASIYILLA TAMIZHAGAMA/c no: 1273135000007931IFSC Code: KVBL0001273BRANCH: Tenkasi branch*பசியில்லா தமிழகம் அறக்கட்டளை**8883340888*www.pasiillathamilaham.com
#தென்காசி_மாவட்ட_நண்பர்கள் #கவனத்திற்கு: தென்காசி பகுதியில் உள்ள தன்னார்வலர்கள் நம்மை தொடர்பு கொண்டு இந்த கிருமி நாசினி யை இலவசமாக பெற்றுக் கொண்டு, தங்கள் பகுதியில் உள்ள பொதுமக்கள் கூடும் இடத்தில் கிருமி நாசினி தெளித்து கொரோனா உங்கள் பகுதியில் நெருங்காத வண்ணம் பாதுகாத்துக் கொள்ளலாம்.தொடர்புக்கு: பசியில்லா தமிழகம் அறக்கட்டளை8883340888உதவி செய்ய:Name: *PASIYILLA TAMIZHAGAM*A/c no: *1273135000007931*IFSC Code: *KVBL0001273*BRANCH: *Tenkasi branch*
#மனநலம்_பாதிக்கப்பட்ட_தாயுடன் #மூன்று_நாட்கள்_உணவு_இல்லாமல் #பசியுடன்_இருந்த_8_மாத_குழந்தை:தென்காசி அருகே குத்துக்கல்வலசை பகுதியில் வடமாநிலத்தில் இருந்து கூர்க்கா வேலை செய்யும் #ஹரேந்திர_பகதூர்_சிங் என்ற நபர் தனது மனைவி #செல்வி_பெருமாள் மற்றும் #அசோக் என்ற எட்டு மாத ஆண் குழந்தையுடன் குடும்பத்தோடு வசித்து வந்தார். அந்தப் பெண்ணுக்கு TB (காசநோய்) வந்ததும், கைக்குழந்தையும் மனைவியையும் அனாதையாக விட்டு விட்டு வட மாநிலத்திற்கு சென்று விட்டார். மூன்று மாதங்களுக்கு மேல் தனிமையிலிருந்து கிடைக்கும் உணவை உண்டு வாழ்ந்து வந்துள்ளனர். கடந்த சில மாதங்களாகவே குழந்தையின் தாய் மனநலம் பாதிக்கப்பட்டு கைக்குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். பசியின் கொடுமையால் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மேல் அந்த 8 மாத குழந்தை கதறி அழுதுள்ளது. குழந்தையின் தொடர் அழுகையை கேட்ட அக்கம்பக்கத்தினர் அந்த குழந்தைக்கு தேவையான உணவுகளை கொடுத்து, மனநலம் பாதிக்கப்பட்ட அந்த தாயை தொடர்ந்து பாதுகாத்து வந்துள்ளனர். ஊர் மக்கள் மூலமாக நமது #பசியில்லா_தமிழகத்திற்கு தகவல் வந்தது. நமது குழுவினர் விரைந்து சென்று அவர்களை மீட்டெடுத்து தொடர்ந்து நான்கு நாட்கள் தென்காசி அரசு மருத்துவமனை அழைத்து சென்று அவர்களுக்கு தேவையான முதலுதவி அனைத்தையும் செய்து, அவர்களை காசநோய் பிரிவில் சேர்த்து அவர்களுக்கான மருந்து மாத்திரைகளை வாங்கிக் கொடுத்தோம்.இந்தக் குழந்தையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நமது தென்காசி பகுதி காவல் ஆய்வாளர் #திரு_ஆடிவேல் ஐயா அவர்களின் உடனடி முயற்சியில், அந்த குழந்தையையும், தாயையும் திருநெல்வேலி மாநகராட்சி தற்காலிக சிறப்பு முகாமில் சேர்த்துள்ளோம்.தென்காசி காவல்நிலைய எழுத்தாளர் #திரு_ராஜேந்திரன் ஐயா அவர்கள் அதற்கான GENERAL MEMO வை உடனடியாக கொடுத்து உதவினார்கள்.ஏற்கனவே திருநெல்வேலி மாநகராட்சியில் ஆதரவில்லாத முதியவர்கள் வாழ்ந்து வந்த நிலையில், எட்டு மாத கைக்குழந்தை அசோக் அவர்களுக்கு கிடைத்ததில் பெருமகிழ்ச்சி கொண்டு அனைவரும் அவர்களுடன் விளையாடியது மனதை வருடிய சம்பவமாக இருந்தது.குழந்தை மீட்கப்பட்ட நாள் முதல் காப்பகத்தில் சேர்க்கும் வரை அனைத்து வகையிலும் வழிகாட்டிய திருநெல்வேலி மாநகராட்சி ஆதரவற்றோர் இல்லம் மற்றும் #R_SOYA_அறக்கட்டளை நிறுவனர் #சரவணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.உதவி செய்ய:Name: PASIYILLA TAMIZHAGAMA/c no: 1273135000007931IFSC Code: KVBL0001273BRANCH: Tenkasi branch#பசியில்லா_தமிழகம்_அறக்கட்டளை8883340888www.pasiillathamilaham.com
#24_மணி_நேரத்தில்_2_லட்சம்_கொடுத்த #சமூக_வலைதள_நண்பர்கள் #அனைவருக்கும்_கோடான_நன்றிகள்:இரண்டு மாத குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்காக பொருளாதார உதவி வேண்டி நேற்று பதிவிட்டு இருந்தோம். பதிவிட்ட 24 மணி நேரத்தில் அந்த குழந்தையின் சிகிச்சைக்காக சமூக வலைதள நண்பர்கள் மூலமாக ரூபாய் #2_லட்சம் கிடைத்துள்ளது. குழந்தையின் உடல்நிலை நேற்று இருந்ததைவிட இன்று நல்ல நிலையில் இருக்கிறது. தொடர்ந்து ICU WARD சிகிச்சையில் உள்ளது. இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் என்ன சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பது தெரியும். மேற்கொண்டு திருவனந்தபுரம் அல்லது வேலூர் செல்வதற்கு திட்டமிட்டுள்ளோம். உங்கள் அனைவரின் உதவியாலும் வேண்டுதலாலும் தான் அந்த குழந்தை இன்று நலமாக உள்ளது. தங்களின் வேண்டுதல்களோடு தொடர்ந்து இந்த குழந்தைக்காக வேண்டிக் கொள்ளுங்கள். இறைவன் நாட்டத்தால் அந்த குழந்தை மீண்டு வர வேண்டும்.உதவி செய்ய:Name: PASIYILLA TAMIZHAGAMA/c no: 1273135000007931IFSC Code: KVBL0001273BRANCH: Tenkasi branchபசியில்லா தமிழகம் அறக்கட்டளை8883340888www.pasiillathamilaham.com