பசியில்லா தமிழகம் அறக்கட்டளையின் 100 நாட்கள் கருணை பயணம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி பகுதியில் ஆதரவற்று சாலையோரம் சுற்றித் திரிந்த ஒரு நபரை சுத்தம் செய்து அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தோம்.இதனைப் பார்த்த வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் நம்மை தொடர்பு கொண்டு இந்த புகைப்படத்தில் இருக்கும் நபர் எனது மகன் என்று கூறினார்.சுமார் 12 வருடங்களுக்கு முன்பு வேலூரில் மனநலம் சரியில்லாத நிலையில் குடும்பத்தை விட்டு வழிதவறி சென்றுவிட்டார் என்றும்,நீங்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு நபர் எனது மகன் ஐயப்பன் என்றும் கூறினார். உடனடியாக பசியில்லா தமிழகம் அறக்கட்டளை குழுவினர் அந்த ஐயப்பன் என்ற நபரை தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் மனிதம் விதைப்போம் அறக்கட்டளையின் நண்பர்கள் உதவியுடன் தென்காசி வரவழைத்து தென்காசி காவல் துறையினர் மூலம் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.குடும்பம் மிகவும் வறுமை நிலையில் இருப்பதால் வேலூர் பகுதியில் ஏபிஜே பிரண்ட்ஸ் அண்ட் பிரதர்ஸ் அறக்கட்டளை சார்பாக வேலூர் பகுதியை சேர்ந்த நண்பர்கள் வாகனம் மூலம் தென்காசி வந்து அவர்களை அழைத்துச் சென்று வாணியம்பாடியில் சென்று சேர்க்க உள்ளார்.முதற்கட்டமாக விழுப்புரம் அருகே உள்ள அன்பு ஜோதி ஆசிரமத்திற்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்படுகிறார்.பசியில்லா தமிழகம் அறக்கட்டளை8883340888
#மீள்_பதிவு:#மன_தைரியம்_இல்லாதவர்கள் #வீடியோவை_கண்டிப்பாக_பார்க்க #வேண்டாம்.#புகை_பான்பராக்_மது #அருந்துபவர்களுக்கு #விழிப்புணர்வுக்கான_பதிவு:6 மாதங்களுக்கு முன்பு தென்காசி அருகே வடகரை பகுதியைச் சேர்ந்த #அமத்தல் என்ற 80 வயது முதியவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பராமரிப்பதற்கு யாருமின்றி தனிமையில் வேதனைப்பட்டு வந்துள்ளார்.அதே பகுதியைச் சேர்ந்த நண்பர் #இஸ்மாயில் அவர்கள் நமது பசியில்லா தமிழகத்தை தொடர்புகொண்டு பேசினார். நமது குழுவினர்கள் விரைந்து சென்று அவரை மீட்டோம்.சென்னை அடையாறு மருத்துவமனைக்கு செல்வதற்கு திட்டமிட்டோம். ஆனால் புற்றுநோய் இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டது. வாயிலிருந்து புழுக்கள் கொத்துக்கொத்தாக வெளிவரத் துவங்கியது.மருத்துவர்களே சிகிச்சை மேற்கொள்ள தயங்கிய நிலையில் நமது பசியில்லா தமிழகம் குழுவினர்கள் இரண்டு நாட்களுக்கும் மேலாக அவர்கள் வாயில் இருக்கும் அனைத்து புழுக்களையும் எடுப்பதற்கு உதவியாக இருந்தோம்.இன்று மாலைக்குள் இறந்துவிடுவார் என்று மருத்துவர்கள் கூறினார்கள். இறைவன் நாடியதால் நம்மால் 20 நாட்களுக்கு மேல் காப்பாற்ற முடிந்தது. பிறகு இறைவனின் அழைப்பை ஏற்றுக்கொண்டார்.அவரது உடல் வடகரையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. உதவி செய்த R-SOYA அறக்கட்டளை சரவணன், திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர், திருநெல்வேலி நீதிமன்ற நீதிபதி, மற்றும் அனைத்து மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும், துப்புரவு பணியாளர்களுக்கும், பொருளாதார உதவி செய்த நல் உள்ளங்களுக்கும், பசியில்லா தமிழகம் அறக்கட்டளை சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.பசியில்லா தமிழகம் அறக்கட்டளை8883340888www.pasiillatamilaham.com
#பசி_ஒரு_கொடிய_நோய்…#பணக்காரர்கள்_பசிக்க_ஓடுகிறார்கள்…#ஏழைகள்_பசிக்கு_ஓடுகிறார்கள்…பசியில்லா தமிழகத்தின் கருணை பயணம் 80 நாளான நேற்று புதுச்சேரியில் துவங்கியது.புதுச்சேரி சபாநாயகர் #மாண்புமிகு_சிவக்கொழுந்து ஐயா அவர்கள் தலைமையில் துவங்கியது.முதல் நாளான அன்று இரண்டு நபர்களை சரி செய்து அவர்களை விழுப்புரம் அருகே உள்ள ஜுபின் பேபி அண்ணா நடத்தும் #அன்பு_ஜோதி_காப்பகத்தில் புதுச்சேரி காவல்துறை அனுமதியுடன் அனுமதித்து உள்ளோம்.மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் அவர்களை சரிசெய்து நமது வாகனத்தில் அவர்களை கொண்டு சென்றோம். விழுப்புரம் செல்லும் வழியில் நமது வாகனம் முழுவதும் ஆதரவற்ற முதியவர் மலம் கழித்து விட்டார். சாலையில் வாகனத்தை நிறுத்தி அவரை இறக்கி சுத்தம் செய்து மீண்டும் புத்தாடைகள் அணிந்து, வாகனத்தையும் சுத்தம் செய்து விழுப்புரம் சென்றடைந்து அவர்களை உரிய இடத்தில் ஒப்படைத்தோம்.#கருணை_பயணத்திற்கு_உங்களால் #முடிந்த_உதவிகளை_செய்யுமாறு #கேட்டுக்கொள்கிறோம்.பசியில்லா தமிழகம் அறக்கட்டளை8883340888www.pasiillatamilaham.com
#புதுச்சேரியில்_கருணைப்_பயணம்சாலையோரங்களில் மிகவும் மோசமாக குளிக்காமல் பல் துலக்காமல் முடி வளர்ந்து அழுக்கான ஆடையில் இருக்கும் ஆதரவற்ற சகமனிதர்களையும், உடல்நலம் மற்றும் மனநலம் குன்றியவர்களை முடிதிருத்தி குளிக்க பல்துலக்க வைத்து,புதிய ஆடை உடுத்தி சகமனிதனாக மாற்றிய பின்;அவர்கள் விரும்பும் பட்சத்தில் உரிய மறுவாழ்வு இல்லங்களில் முறைப்படி சேர்க்கும் பணியை தமிழகத்தில் 15 மாநகராட்சிகள் மற்றும் புதுச்சேரி நகராட்சி என 100 நாட்களை கடந்து குறைந்த பட்சமாக 350 நபர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கும் கருணை பயணம் கடந்த 6ந் தேதி தொடங்கி தமிழகத்தில் 14 மாநகராட்சியில் விழிப்புணர்வு மற்றும் மறுவாழ்வுக்கான பணி செய்தபின் 80வது நாளாக புதுச்சேரி மாநிலத்தில் *இன்று 24.11.2019 காலை 12.30க்கு சட்டமன்ற வளாகத்தில் வைத்து *புதுச்சேரி மாநில சட்டமன்ற சபாநாயகர் #மாண்புமிகு_சிவக்கொழுந்து அவர்கள் கருணைப் பயணத்தை கொடியசைத்து துவங்கி வைத்தார். ஒருங்கிணைப்பாளர்கள் சோயா S.N.சரவணன் M.Sc., LLB., M.முகமதுஅலி ஜின்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதை தொடர்ந்து பழைய பஸ்நிலையத்தில் மிகவும் மோசமாக அருவெறுக்க தக்க நிலையில் சுற்றித் திரிந்த இருவரை மீட்டு சகமனிதனாக மாற்றினோம். சபாநாயகர் அவர்களை பொன்னாடை போட்டு புதுவாழ்கை தொடங்க வாழ்த்துக்கள் கூறி வழி அனுப்பி வைத்தார். அவரை காவல்நிலையத்தில் புகார் செய்து இருவரையும் தேடி உறவினர்கள் வரும்வரை பாதுகாப்பாக வாழ விழுப்புரத்தில் உள்ள ஜூபின்பேபி அன்பு ஜோதி இல்லத்தில் சேர்த்தோம். புதுச்சேரி மாநிலத்தில் மகேஷ் தலைமையில் தொடர்ந்து 5 தினங்கள் சேவைப்பணியை தொடர உள்ளோம்.திருநெல்வேலி மாநகராட்சி ஆதரவற்றோர் இல்லம்,பசியில்லா தமிழகம் அறக்கட்டளை, தென்காசி. 8883340888R-SOYA தொண்டு நிறுவனம் 9976649066
பசியில்லா தமிழகம் கருணை பயணம் தற்போது வேலூரில் சென்று கொண்டிருக்கிறது. வேலூரில் திறம்பட செயல்பட்டு கொண்டு இருக்கும் APJ. அப்துல் கலாம் குழுவினருடன் இணைந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.கருணை பயணத்தின் நோக்கம் அறிந்து இந்தப் பகுதி இளைஞர்கள் நம்முடன் இணைந்து மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும், ஆதரவில்லாதவர்களுக்கும், சிகிச்சை அளிக்கும் முறையை கற்றுக்கொண்டு வருங்காலங்களில் இந்தப் பகுதியில் இதுபோன்ற சேவைகளை செய்ய தங்களை தயார்ப்படுத்திக் கொண்டனர்.பசியில்லா தமிழகம் அறக்கட்டளை8883340888www.pasiillatamilaham.com