எனது ஆருயிர் நண்பர் #கௌரி அவர்களின் #நம்மால்_நமக்காக
அறக்கட்டளைக்காக நான் எழுதிய பாடல் வரிகள் …
எனது நண்பர் #உதய் இசை அமைத்துள்ளார். பாடல் கடந்த வருடம் சென்னையில் வெளியிடப்பட்டது.
இன்றைய இளைஞர்களுக்கு வழிகாட்டியாக அமைவதற்காக வேண்டி இயற்றப்பட்டது. பார்வைக்காக குழந்தைகளுடன் இருக்கும் வீடியோ இணைத்துள்ளோம்.
பாடலை கேட்டு கருத்துக்களை தெரிவிக்கவும். முழு பாடலையும் பதிவேற்ற முடியவில்லை.. (தேவைப்படும் பட்சத்தில் முழு பாடலையும் வெளியிடலாம்)
#ரஹ்மத்_ஜின்னா_ன்_பாடல்_வரிகள்:
என் தேசமே எழுந்து வா….
மலர் வாசமே பரந்து வா….
இந்த தேசம் முழுதும்
தாய் மண்ணின் மனம் வீசவா…
என் இளைஞனே எழுந்து வா….
இள ரத்தமே துணிந்து வா….
உன் வியர்வை கடல் மீது
வெற்றி அலை பாயவா….
கருமேகமெல்லாம் மழையில் மண்ணைத்தொடும்….
நம் வெற்றியெல்லாம் விரைவில்
விண்ணைத்தொடும்….
முதல் முயற்சிகள் என்றும் வலிக்கும்,
பின் வியர்வையின் மூலம் ஜொலிக்கும்…
பல முயற்சியின் வெற்றியை
கண்ணீர் பேசுமே…..
#நம்மால்_நமக்காக
நம்மால்_நமக்காக
நம்மால்_நமக்காக….
நம்மால்_நமக்காக
நம்மால்_நமக்காக
நம்மால்_நமக்காக………
வானில் ஏணி போடு,
நீ மேகம் ஏறி பாரு…
உலகம் முழுவதும் உள்ளங்கையிலே
அள்ளி வந்து சேரு…
தடைக்கு தடைகள் போடு,
நீ விதைக்குள் விருட்சம் தேடு…
விதைக்குள் மட்டுமே இருக்கும் மரங்களை கண்கள் காண்பதில்லை…
இனி உங்கள் கையில் உலகம் ஒளிரட்டுமே…
அதை உலகம் முழுதும் நின்று ரசிக்கட்டுமே…
நம் தேசம் காக்க இணைவோம்,
புது வெற்றி கண்டு வருவோம்…
கூடும் கூட்டத்தில் விண்ணைத்தாண்டி விடுவோம்….
நம்மால்_நமக்காக
நம்மால்_நமக்காக
நம்மால்_நமக்காக…..
நம்மால்_நமக்காக
நம்மால்_நமக்காக
நம்மால்_நமக்காக…..
கட்சி தேவையில்லை…
ஒரு கொடியும் தேவையில்லை…
கலாம் கைபிடித்த காலம் முழுதும்
நம் கண்ணில் கலக்கமில்லை…
வெற்றி தேவையில்லை…
ஒரு தோல்வி தேவையில்லை…
வெற்றி தோல்விகள் ரெண்டும் கொண்டு நம் விண்ணை அளக்கவில்லை….
நம் வாழ்வு மொத்தம்
இன்னும் சில வருடங்கள்,
நம் வாழ்ந்த பின்னும்
வேண்டும் நம் நினைவுகள்….
விழுந்தால் விதையென விழுவோம்….
எழுந்தால் மரமென எழுவோம்….
தரித்திரம் விடுத்து
சரித்திரம் ஆக்குவோம்….
நம்மால்_நமக்காக
நம்மால்_நமக்காக
நம்மால்_நமக்காக….
நம்மால்_நமக்காக
நம்மால்_நமக்காக
நம்மால்_நமக்காக….







Views Today : 1
Views Yesterday : 5
Views This Month : 19
Views This Year : 586
Total views : 24661
Who's Online : 0




