#தாயிடம்_குழந்தையை_பரிசாகக்_கொடுத்த_நிகழ்வு:#இரண்டாவது_வெற்றி#கருணை_பயணத்தில்:2 நிமிட வீடியோவை முழுமையாக பார்த்து மற்றவருக்கும் பகிர்ந்து கொள்ளவும்.நமது கருணை பயணம் ஈரோட்டில் தொடர்ந்து கொண்டிருந்த பொழுது ஈரோடு பேருந்து நிலையத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு ஆதரவில்லாத நிலையில் சுற்றித்திரிந்த ஒரு நபரை சுத்தம் செய்து அவரை காப்பகத்தில் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டோம்.இந்தச் செய்தியை முகநூலில் பதிவிட்டு இருந்தோம்.முகநூல் வாயிலாக இந்த செய்தியை அறிந்த மதுரையைச் சார்ந்த ஒரு தம்பதியினர் இது எங்களது குழந்தை என்று கூறி கண்ணீர் மல்க பேசினர்.சேலத்தில் பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்த நாம் உடனடியாக அவர்களை தொடர்பு கொண்டு ஈரோடு வரவழைக்கும் முயற்சியில் ஈடுபட்டோம்.மகன் கிடைத்த மகிழ்ச்சியை கொண்டாடுவதா, அல்லது மதுரையில் இருந்து ஈரோடு செல்வதற்கு கூட பணம் இல்லையே என்று வருத்தப்படவா என்ற நிலையில் அந்த விவசாய குடும்பத்தைச் சார்ந்த நபர் கண்ணீர் மல்க நம்மிடம் கூறினார்.இந்த நிலையை ஈரோட்டில் வசிக்கும் ஏசியன் ஆப்டிகல்ஸ் உரிமையாளர் மன்சூர் அண்ணனிடம் தெரிவித்த பொழுது உடனடியாக அவர்களை வரவழைத்து, அவரது மகனை அவர்களிடம் ஒப்படையுங்கள் அதற்கான அனைத்து செலவுகளையும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறினார்.நேற்று இரவே அவர்கள் மதுரையில் இருந்து வரவழைக்கப்பட்டு அவர்களுக்கான தங்கும் வசதி உணவு மற்றும் பேருந்து கட்டணம் அனைத்தும் மன்சூர் அண்ணன் மூலமாக செய்யப்பட்டது. (சமூகத்தின் வலியை உணர்ந்த மனிதர்).MSK குழுவினர்கள் மூலம் காவல்துறை அனுமதிகளை பெற்ற பிறகு ஈரோடு மாவட்ட காவல்துறை உதவியுடன் அவர்களது மகன் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டான்.மகனை இழந்த பெற்றோர்கள் கண்ணீர் மல்க நன்றி கூறி மகனை அழைத்துச் சென்றனர்.இதோடு கருணை பயணத்தில் இரண்டாவது நபராக குடும்பத்துடன் இணைக்கப்பட்ட நபர். தொடர்ந்து கருணை பயணம் வெற்றி பெற அனைவரும் இறைவனிடம் வேண்டிக் கொள்ளவும்.பசியில்லா தமிழகம் அறக்கட்டளை8883340888www.pasiillatamilaham.com
Posted by Pasi illa Tenkasi on Friday, November 8, 2019







Views Today : 2
Views Yesterday : 5
Views This Month : 20
Views This Year : 587
Total views : 24662
Who's Online : 0




