Second Success in our journey…

#தாயிடம்_குழந்தையை_பரிசாகக்_கொடுத்த_நிகழ்வு:#இரண்டாவது_வெற்றி#கருணை_பயணத்தில்:2 நிமிட வீடியோவை முழுமையாக பார்த்து மற்றவருக்கும் பகிர்ந்து கொள்ளவும்.நமது கருணை பயணம் ஈரோட்டில் தொடர்ந்து கொண்டிருந்த பொழுது ஈரோடு பேருந்து நிலையத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு ஆதரவில்லாத நிலையில் சுற்றித்திரிந்த ஒரு நபரை சுத்தம் செய்து அவரை காப்பகத்தில் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டோம்.இந்தச் செய்தியை முகநூலில் பதிவிட்டு இருந்தோம்.முகநூல் வாயிலாக இந்த செய்தியை அறிந்த மதுரையைச் சார்ந்த ஒரு தம்பதியினர் இது எங்களது குழந்தை என்று கூறி கண்ணீர் மல்க பேசினர்.சேலத்தில் பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்த நாம் உடனடியாக அவர்களை தொடர்பு கொண்டு ஈரோடு வரவழைக்கும் முயற்சியில் ஈடுபட்டோம்.மகன் கிடைத்த மகிழ்ச்சியை கொண்டாடுவதா, அல்லது மதுரையில் இருந்து ஈரோடு செல்வதற்கு கூட பணம் இல்லையே என்று வருத்தப்படவா என்ற நிலையில் அந்த விவசாய குடும்பத்தைச் சார்ந்த நபர் கண்ணீர் மல்க நம்மிடம் கூறினார்.இந்த நிலையை ஈரோட்டில் வசிக்கும் ஏசியன் ஆப்டிகல்ஸ் உரிமையாளர் மன்சூர் அண்ணனிடம் தெரிவித்த பொழுது உடனடியாக அவர்களை வரவழைத்து, அவரது மகனை அவர்களிடம் ஒப்படையுங்கள் அதற்கான அனைத்து செலவுகளையும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறினார்.நேற்று இரவே அவர்கள் மதுரையில் இருந்து வரவழைக்கப்பட்டு அவர்களுக்கான தங்கும் வசதி உணவு மற்றும் பேருந்து கட்டணம் அனைத்தும் மன்சூர் அண்ணன் மூலமாக செய்யப்பட்டது. (சமூகத்தின் வலியை உணர்ந்த மனிதர்).MSK குழுவினர்கள் மூலம் காவல்துறை அனுமதிகளை பெற்ற பிறகு ஈரோடு மாவட்ட காவல்துறை உதவியுடன் அவர்களது மகன் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டான்.மகனை இழந்த பெற்றோர்கள் கண்ணீர் மல்க நன்றி கூறி மகனை அழைத்துச் சென்றனர்.இதோடு கருணை பயணத்தில் இரண்டாவது நபராக குடும்பத்துடன் இணைக்கப்பட்ட நபர். தொடர்ந்து கருணை பயணம் வெற்றி பெற அனைவரும் இறைவனிடம் வேண்டிக் கொள்ளவும்.பசியில்லா தமிழகம் அறக்கட்டளை8883340888www.pasiillatamilaham.com

Posted by Pasi illa Tenkasi on Friday, November 8, 2019

Heartily Thankful to Facebook Friends…

#முகநூல்_நண்பர்களுக்கு_நன்றி:நமது கருணை பயணத்திலே இரண்டு நாட்களுக்கு முன்பாக மனநலம் பாதிக்கப்பட்ட நபரை சுத்தம்செய்து மருத்துவமனையில் அனுமதித்தோம். அந்த பதிவை முகநூலில் பதிவிட்டு அதன் மூலம் மலேசியாவில் வாழும் நமது நண்பர் வந்து முகநூலை பார்த்து இதில் வரும் எனது நண்பர் என்று கூறி நம்மிடம் பேசினார். நாமும் கள்ளக்குறிச்சியில் உள்ள அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவித்தோம்.12 வருடங்களுக்கு முன்பு தொலைந்த தனது மகனை காண உடனடியாக சேலம் வந்து தொலைந்த மகனை கட்டித்தழுவி முத்தமிட்டு கண்ணீர் விட்டனர். அதனைப் பார்க்கும் பொழுது நமக்கும் கண்ணீர் வந்தது.பிறகு சேலம் மாநகராட்சியில் காவல்துறை அதிகாரிகளின் அனுமதியின் பேரில் மீட்கப்பட்ட நபர் அவரது குடும்பத்தாருடன் சேர்த்து வைக்கப்பட்டார்.கருணை பயணம் சரியான திசையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது இன்னும் இதுபோன்ற பல நபர்களை மீட்டு மறுவாழ்வு கொடுக்கும் முயற்சியில் தொடர்ந்து செய்தியைப் பகிர்ந்து குடும்பத்தினருடன் சேர்ப்பதற்குசெய்தியைப் பகிர்ந்து குடும்பத்தினருடன் சேர்ப்பதற்கு உறுதுணையாக இருந்த முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் பசியில்லா தமிழகத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.பசியில்லா தமிழகம் அறக்கட்டளை8883340888

Posted by Pasi illa Tenkasi on Thursday, November 7, 2019

We are proud to give a new life to the man

நாமும் கொலைகாரர்கள் தான்…ஆம்…இது போன்ற நபர்களை பார்த்தும் பார்க்காமல் சென்றால் நாமும் கொலைகாரர்கள் தான்.தயவு செய்து 3 நிமிடம் இந்த வீடியோவை பார்த்து நம்மை நாமே திருத்திக் கொள்வோம்.30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஆதரவில்லாமல் மனநலம் பாதிக்கப்பட்டு பேருந்துநிலையத்தில் சாக்கடையில் இருக்கும் உணவுப் பொருட்களை உட்கொண்டு வாழ்ந்து வந்திருக்கிறார்.தன் உடல் முழுவதும் கயிறுகளை கட்டியும் ஐந்து விரல்களிலும் மோதிரங்களை மாட்டியும் பல காலங்களாக மனநலம் பாதிக்கப்பட்வர், அந்த மோதிரம் விரலை இருக்கவே அதனை கழட்டி அப்புறப்படுத்த தெரியாமல் அப்படியே விட்டுவிட்டார்.அந்த இறுகிய மோதிரமானது அவரது விரலை காயப்படுத்தி அந்த காயம் புண்ணாகி சீழ் வடிந்து விரல்கள் துண்டாகும் நிலைக்கு அழுகிய நிலையில் காணப்பட்டது. நாம் அவரை மீட்டு மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் அவரை சுத்தப்படுத்தி திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று முதலுதவி செய்து மேல்சிகிச்சைக்காக சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்து உடனடியாக அறுவை சிகிச்சை செய்து அந்த மோதிரத்தை நீக்கி கையிலே தையல் போட்டு விரல்களை ஒட்ட வைத்து மருத்துவமனையில் சேர்த்துள்ளோம்.அவரை நிம்மதியாக மருத்துவமனையில் உறங்க வைத்து அவரது பாதுகாப்பிற்காக நமது *கருணை பயணக் குழுவினர்* மருத்துவமனை வளாகத்திலேயே தங்கி இருக்கிறோம்.இனி இதுபோன்று ஒரு உயிரையும் கஷ்டப்பட விடாமல், நம்மால் முடிந்தவரை காப்பாற்றுவோம்.ஆதரவற்றோருக்கு ஆதரவாய் இருப்போம்… பசியில்லா தமிழகம் உருவாக்குவோம்…பசியில்லா தமிழகம் அறக்கட்டளை8883340888

Posted by Pasi illa Tenkasi on Tuesday, November 5, 2019

Karunai Payanam-Erode

ஈரோடு மாநகராட்சியில் நமது கருணை பயணம் இனிதே துவங்கியது.சாலையோரம் இருக்கும் ஆதரவில்லாத மனநலம் பாதிக்கப்பட்ட நபரை சுத்தம் செய்து புத்தாடைகள் அணிவித்தோம். அனைத்து வகையிலும் உறுதுணையாக இருந்த நல்லோர் வட்டம் மன்சூர் அவர்களுக்கும் MSK உறுப்பினர்களுக்கும் ஈரோடு காவல்துறையினருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.பசியில்லா தமிழகம் அறக்கட்டளை.8883340888

Posted by Pasi illa Tenkasi on Sunday, November 3, 2019

Dr. APJ. Abdul Kalam Birthday

Dr. APJ. Abdul Kalam Birthday celebrated in Raja college Ramanadhapuram with pasi illa tamilaham team

இளைஞர்களின் எழுச்சி நாளான #A_P_J_அப்துல்கலாம் ஐயா அவர்களின் பிறந்தநாளான இன்று பசியில்லா தமிழகத்தின் கருணைப் பயணம்…

Posted by Pasi illa Tenkasi on Tuesday, October 15, 2019

A little help you can

A little help you can give us for the support of pasi illa tamilaham

பசியில்லா தமிழகத்தின் கருணைப் பயணமானது 6 மாநகராட்சிகளில் திருப்திகரமாக முடித்து தற்போது கோவைக்கு சென்று கொண்டிருக்கிறது.நமது கருணைப் பயணத்தில் சாலையோரம் இருக்க கூடிய மனநலம் பாதிக்கப்பட்ட ஆதரவு இல்லாதவர்களை சரிசெய்து அவர்களை காப்பகத்தில் சேர்க்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.மிகுந்த பொருளாதார சிக்கலுடன் நமது கருணைப் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. உங்களது ஒவ்வொரு ரூபாய் பணமும் நிச்சயமான முறையில் நல்ல சமூக மாற்றத்திற்கும், பசியில்லா தமிழகத்தை உருவாக்குவதற்கும் நிச்சயம் பயன்படும் என உறுதி கூறுகிறோம்.நிதி நிலைமை மிகவும் மோசமாக இருப்பதால் பயணம் சிரமத்துடன் செல்கிறது பயணம் வெற்றிகரமாக முடிய உங்கள் ஒவ்வொருவரின் ஒத்துழைப்பும் தேவைபடுகிறது.நன்றிபசியில்லா தமிழகம் அறக்கட்டளை Name: Mohamed Ali jinna A/c no: 1273155000088343IFSC CODE: KVBL0001273BANK: KARUR VYSYA BANK TENKASI BRANCH….Google pay : 8883340888

Posted by Pasi illa Tenkasi on Monday, October 14, 2019

மனிதம் விதைப்போம் அறக்கட்டளை நண்பர்கள்…

மனிதம் விதைப்போம் நண்பர்கள்… – Pasi illa tamilaham

நமது #கருணைப்பயணத்தில் நமக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் தூத்துக்குடி #மனிதம்_விதைப்போம்_அறக்கட்டளை நண்பர்கள்… #மனிதம்_விதைப்போம் என்று பெயரளவில் இல்லாமல் உண்மையாக தூத்துக்குடியில் மனிதத்தை விதைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுடன் இணைந்து பணியாற்றியதில் பசியில்லா தமிழகம் குழுவினர்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம்..பசியில்லா தமிழகம் அறக்கட்டளை 8883340888

Posted by Pasi illa Tenkasi on Sunday, October 13, 2019

Adaikala Matha College

Adaikala Matha College MSW students hands with us – Pasi illa tamilaham

#உலக_மன_நல_தினத்தை( world mental health day)முன்னிட்டு நாம் மேற்கொண்ட கருணைப் பயணமானது தஞ்சாவூரில் தமது பணிகளை தொடங்கியது.#சட்டபணிகள்_ஆணைக்குழு_தலைவர், மற்றும் #செயலர்_நீதிபதி அவர்களும், காவல்துறை உயர் அதிகாரிகளும் மற்றும் தஞ்சாவூர் பகுதி சமூக ஆர்வலர்கள்,#அடைக்கலமாதா_கல்லூரி MSW படிக்கும் மாணவ, மாணவிகளும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.நமது #கருணைப்_பயணம் நிகழ்ச்சி தஞ்சாவூர் நீதிமன்ற வளாகத்தில் துவங்கியது. பின்னர் சாலையோரம் சென்று மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்தோம் அதில் ப்ரியா என்ற 22 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை சுத்தம் செய்து கல்லூரி மாணவர்களுக்கு அவர்களை கையாளும் விதம் பற்றியும் எடுத்துக்கூறப்பட்டது.மேலும் நீதிபதி அவர்களும் களத்திற்கு வந்து நாம் செய்யும் பணிகளை பாராட்டி நம்முடன்னே இருந்து அப்பெண்ணிற்கு உரிய மருத்துவ உதவி அளித்து காப்பகத்தில் சேர்க்கும் வரை அனைவரும் எங்களுடன் இருந்து ஒத்துழைப்பு தந்தனர்.இனிவரும் காலங்களில் இதுபோன்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சாலையோரம் இருக்க கூடாது என்று மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களுக்கு கருத்தரங்கம் ஏற்பாடு செய்த நீதிபதி அவர்களுக்கும், அனைத்து நண்பர்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் #பசியில்லா_தமிழகம்_அறக்கட்டளை சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்

Posted by Pasi illa Tenkasi on Friday, October 11, 2019
Translate »